இலங்கிலாந்து எம்.பி.க்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

இங்கிலாந்தின் இரு தொழிற்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து வைத்ததற்காக இஸ்ரேலிய அதிகாரிகளை பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் லாமி விமர்சித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை “ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஆழ்ந்த கவலைக்குரியது” என்றும் அவர் விவரித்தார்.
மேலும், பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இரு எம்.பி.க்களையும் தொடர்பு கொண்டு ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.
இஸ்ரேலுக்கு எதிராக “வெறுக்கத்தக்க பேச்சைப் பரப்ப அவர்கள் முயன்றமையினால் அப்திசம் மொஹமட் மற்றும் யுவான் யாங் ஆகியோருக்கு நுழைவு மறுக்கப்பட்டதாக இஸ்ரேலிய குடிவரவு அமைச்சு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏர்லி மற்றும் உட்லியின் எம்.பி.யான யாங் மற்றும் ஷெஃபீல்ட் சென்ட்ரலின் எம்.பி.யான மொஹமட் ஆகியோர் சனிக்கிழமை (05)பிற்பகல் இரண்டு உதவியாளர்களுடன் லண்டன் லூடன் விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்துக்கு திரும்பினர்.
இஸ்ரேலிய குடியேற்ற ஆணையம், உள்துறை அமைச்சர் மோஷே அர்பெல் நான்கு பயணிகளையும் விசாரித்த பின்னர் அவர்களுக்குள் நுழைய மறுத்ததாகக் கூறியது.
இந்தக் குழு நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேலின் குடியேற்ற ஆணையம் இந்தக் கூற்றை மறுத்து, அந்தக் குழுவை எந்த இஸ்ரேலிய அதிகாரியும் அங்கீகரிக்கவில்லை என்று கூறியது.