இந்தியா
பாம்பன் புதிய பாலம்; இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி – சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேஸ்வரம் – தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அநுராதபுரத்தில் இருந்து எம் ஐ 17 ரக ஹெலிகொப்டர் மூலம் பிரதமர் மோடி மண்டபம் சென்றடைந்தார்.
ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, ராமநாதபுரம் ஆட்சியர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், நவாஸ்கனி எம்.பி., ஜி.கே. வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா தமிழிசை சௌந்தரராஜன், கருப்பு முருகானந்தம், சரத்குமார், அரவிந்த மேனன் ஆகியோர் வரவேற்றனர்.