ஜனாதிபதி அநுரவை தூக்கிலிட வேண்டும்; லொஹான் ரத்வத்த கூறுகிறார்

ஜே.வி.பி. கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டுமெனவும் அரசியல்வாதிகளின் மனைவிகள் கைது செய்யப்படும் நிலையில் தனது மனைவியை தொட்டால் என்ன செய்ய வேண்டுமென தனக்கு தெரியுமெனவும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கொள்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்கள் என்னையும் என் மனைவியையும் சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், இப்போது மற்றொரு முன்னாள் முதலமைச்சரும் ஒரு முன்னாள் அமைச்சரின் மனைவியும் கூட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை வெட்கக்கேடானது எனவும் தெரிவித்தார்.
ஜே.வி.பி. கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
நீங்கள் தேசத்திற்கு நல்லது செய்தால் நாங்கள் உங்களை ஆதரிப்போம். இல்லையென்றால், நாங்கள் மாற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். ஆனால் நீங்கள் என் மனைவியைத் தொட்டால், நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.