உலகம்

ஹமாஸுக்கு எதிராக போராட்டம்; அறுவருக்கு மரண தண்டனை

கடந்த வாரம், ஹமாஸ் குழுவினர் காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என ஆயிரக்கணக்கான பால்ஸ்தீனியர்கள் வடக்கு காசாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டதாகவும், 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் போரட்டம் நடத்தியவரலில் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட ஆறு பேரில் 22 வயதான இளைஞன் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

இவர், காசாவின் டெல் அவிவ் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர். கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை அவரின் வீட்டின் வெளியே ஹமாஸ் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

“எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்த 22 வயது பாலஸ்தீனியர்” கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்று, அவர் (கொல்லப்பட்டஇளைஞரை) கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் தடிகளாலும், உலோகக் கம்பிகளாலும் தாக்கப்பட்டார் என்று பெயர் வெளியிட விரும்பாத காசாவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது.

2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹமாஸை எதிர்த்து காசாவில் கிளர்ச்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஹமாஸ் கடுமையான அடக்குமுறையால் கட்டுப்படுத்தியாக நம்பப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.