நிதி மோசடிக் குற்றச்சாட்டில் அருண் தம்பிமுத்து சி.ஐ .டி.யால் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து நேற்று புதன்கிழமை பாசிக்குடா தனியார் விடுதியில் வைத்து சி.ஐ .டி. நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த கனடாவிலுள்ள ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட நிலையில் அந்த வர்த்தகத்திற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடியே 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்று அந்த நிதியை மோசடி செய்தார் என கனடாவிலுள்ள அவர் கொழும்பிலுள்ள சி.ஐ.டி. நிதி மோசடி பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, இந்த நிதி மோசடி தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் தனியார் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த வந்த சி.ஐ.டி. நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.