உலகம்

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். 1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையில் பயண அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இந்தப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று டிரம்ப் பதில் அளித்தார்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *