நேசம் நாடும் நெஞ்சங்கள்
தரம் 5 மாணவர்களுக்கு பயிற்சி வினாத்தாள் பரீட்சைகள் நடாத்த உதவி கோரல்

மட்/மமே/உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயம்,
உறுகாமம்,
கரடியானாறு.
உதவிக்கோரல்
ஐயா,
மேற்படி எமது பாடசாலை A-5 வீதியில் அமைந்த ஆரம்ப பாடசாலையாகும். தற்போது தரம் ஐந்தில் 19 மாணவர்கள் கற்கின்றனர் இவர்களுக்கான முன் பயிற்சி வினாத்தாள்கள் வழங்கி பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.
இவற்றுக்கான செலவுகளாக 19*39.00=741 படி 30 தடவைகள் பரிச்சை நடாத்த வேண்டி உள்ளது இதன் படி 741* 30 = 22,230/= செலவாக உள்ளது. எமது கிராம பெற்றோர்கள் அன்றாடம் மீன்பிடி தொழில் புரிபவர்கள் என்ற வகையில் மாணவர்களின் நலன் கருதி மேற்படி வினாத்தாள்களை பிரதி செய்வதற்கான பொறுப்பணவை வழங்க ஏதுவான உதவியை செய்தால் பெரும் நன்மையாக இருக்கும்.
நன்றி
அதிபர்
திரு எஸ்.தேவநாதன்
மேலதிக விபரங்களுக்கு: +61 470 156 818