மருத்துவம் சார்ந்ததும் வாழ்வாதாரத்தை மேற்படுத்துவதற்குரிய உதவி கோரல்

சிறீக்காந்தன் சிறீக்கண்ணன்
இலக்கம் 39,
தரணிக்குளம்,
ஒன்பதாம் ஒழுங்கை, வவுனியா.
மருத்துவம் சார்ந்ததும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய உதவிக்கோரல்
மேற்குறிப்பிட்ட முகவரியின் ஊடாக தரணிக்குளத்தில் வசித்து வரும் சிறீக்கண்ணன் ஆகிய எனது குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் தாய், தந்தையாக வாழ்ந்து வருகிறோம்.
கடந்த கால யுத்த காரணத்தின் போது விழுப்புண் அடைந்த நிலையில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தரமான வீடு, காணி மற்றும் அத்தியாவசியத்திற்குரிய தேவைகள் இல்லாத பட்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அத்தோடு தற்காலிக வீட்டில் மாத வாடகை பணம் கொடுத்து வருகிறேன். பிள்ளைகளின் கல்வி தேவைக்கு பண வசதிகள் காணாதபடியால் எனது சிறு வியாபாரத் தொழிலாக செய்து வரும் வடை மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தினை அபிவிருத்தி ஆக்குவதற்கு தேவையான குறிப்பிட்ட சில பொருட்கள் பெற்றுக் கொள்ள உள்ளபடியால் இந்த சந்தர்ப்பத்தில் வியாபாரத்திற்குரிய பொருளாகவும் மருத்துவத்திற்கு பண உதவியாகவும் சேர்த்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் தேவைப்பட்டுள்ளது. வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இதன் மூலம் வரும் பணத்தில் இருந்து கோழி வளர்ப்பை அமைத்துக்கொள்ள இந்த அவசர உதவியை பெற்றும் தரும்படி தாழ்மையுடன் கேட்கிறேன்
இப்படிக்கு
சிறீக்கண்ணன்
மேலதிக விபரங்களுக்கு: +61 470 156 818