முகநூல்
Negative விடயங்களை wanted ஆக செய்து பிரபல்யம் ஆவது ஒரு வகை விளம்பர உத்தி!
எனது ஞாபகத்துக்கு எட்டிய வரையில் முதலில் பவர் ஸ்டார் இந்த உத்தியைப் பயன்படுத்தி பிரபலம் ஆனார்.
அவரே பணம் கொடுத்து லத்திகா என்று ஒரு திரைப்படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாக அவரே நடித்து, அவரே பணம் கொடுத்து அதனை தியேட்டரில் ரிலீஸ் செய்து, அவரே ரசிகர்களுக்கு பணம் கொடுத்து அதனை தொடர்ந்து நூறு நாட்களுக்குப் பார்க்க வைத்து அந்தப் படத்தை செயற்கையாக ஹிட் ஆக்கினார்.
அவர் விழாக்களுக்கு வந்தால் அங்கு ரசிகர்களாக முண்டியடிக்கவும், வாழ்க கோஷம் போடவும் கூட பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்வார்.
இப்படி பிரபலம் ஆன பவர் ஸ்டார் பின்பு இந்திய தமிழ் சினிமாவுக்கள் நுழைந்து நகைச்சுவை வேடத்தில் பல படங்களையும் நடித்திருக்கிறார்.
மைனா படத்தில் நடித்துப் பிரபலமான அமலா பால் என்ற நடிகை ஆரம்பத்தில் பிரபலமாவதற்கு சிந்து சமவெளி என்றொரு கேவலமான incest படத்தில் நடித்திருந்தார்.
இலங்கையிலிருந்து big boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற லொஸ்லியா big boss வீட்டினுள் நடந்து கொண்ட விதம் அவருக்கு எதிர்மறைப் பிரபலத்தை தேடித் தந்தது.
இது சினிமாவில் மட்டுமல்ல, வேறு இடங்களிலும் கூட நடைபெறும்.
விளையாட்டுப் போட்டிகளில் நிர்வாணமாக ஓடுவது, உடம்பு முழுக்க piercing அல்லது tattoo குத்தி பூனை மனிதன், பாம்பு மனிதன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வது, அஃறிணைப் பொருட்களைத் திருமணம் செய்து கொள்வது, அல்லது தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வது, பொது இடங்களில் விநோதமாக நடந்து கொள்வது என்று எல்லாமே இதுபோல ஒருவகை attention seeking தான்.
அந்த வகையில் இப்போது இலங்கையில் ஒருவர் பிரபலமாகி வருகிறார்.
இடம், பொருள், ஏவல் எதுவுமின்றி கண்ட நின்ற இடங்களில் இருந்தெல்லாம் முகநூலில் live போடுகிறார். சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்.
பிறரை மோசமாக அவமதிக்கிறார். கூடவே ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் மானத்தையும் சந்தி சிரிக்க வைக்கிறார்.
போகும் இடம் எல்லாம் எல்லோரையும் வம்புக்கு இழுக்கிறார். MBBS படிக்காத எல்லோரையும் மடையர்கள் என்று திட்டுகிறார். அவரது பார்வையில் MBBS மட்டும்தான் அறிவாளிகள் போல.
அவரது MBBS உம் இன்னுமொருவர் போட்ட பிச்சை என்று ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
இந்த ரணகளத்திற்குள்ளும் இவர் ஊருக்குள் இருக்கும் இரண்டு, மூன்று பிரச்சனைகளை இழுத்து விட்டு பதுங்கிக் கொள்வதால் ஒரு சில அரை வேக்காடுகள் இவரை ஏதோ சாமுராய் வீரன் போல கொண்டாடுகிறார்கள். அதன் பின்னர் அந்தப் பிரச்சனைகளுக்கு என்ன நடந்தது என்பது இவருக்கும் தெரியாது. எவருக்கும் தெரியாது.
இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதி அது. சைக்கிள் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில், பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி தெற்கிற்கு எண்பதாயிரம் சவப் பெட்டிகளை அனுப்பப் போகிறோம், தயாராக இருங்கள் என்று வீர வசனம் பேசி விட்டு கொழும்பு வீட்டிற்குச் சென்று தனது கொழும்பு ஷெயார் மார்க்கெட் வியாபாரத்தில் மூழ்கி விட்டார்.
அவர் பேசியதற்கான விலையை இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொடுத்தார்கள். இன்றும் ஆடியில் ஒரு ஆர்ப்பாட்டம், ஆவணியில் ஒரு உண்ணாவிரதம் என்று அவர்கள் காலம் நகர்கிறது.
இந்த அரைப் பைத்தியரின் கூத்துக்கள் எல்லை மீறிச் செல்கின்றன. வாகனம் ஓடிக்கொண்டே முகநூலில் live வந்து பேசுகிறார். கொழும்பில் கடை கடையாக சென்று shopping செய்து விட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் admit ஆனதாக நீதிமன்றத்திற்கு medical கொடுக்கிறார்.
இந்த அரைப் பைத்தியத்தின் பின்னால், அவர் சொல்வதிலும் சில நியாயங்கள் இருக்கிறது என்று சில முக்கால் பைத்தியங்கள் திரிகின்றன. எல்லாம் தமிழரின் தலை விதி.
குறிப்பு:-
இந்தப் படத்தில் இருப்பவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அவர்கள். இந்தப் பதிவிற்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அனேகமாக இந்தப் படம் உப்பு சத்தியாக்கிரகத்தில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.