முகநூல்

எண்ணிம உயிரியல் அடையாள அட்டையின் சாதக பாதகங்கள் (Pros and Cons of Biometric Digital ID) – Part-2

உடல் நல, மருத்துவ தரவுகள் முதல் நிதித் தரவுகள் வரை அனைத்தையும் எண்ணிம அடையாள அட்டை மூலம் இணைக்கும் கருத்தியலானது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியுடன் வளர்ந்து AI யின் வரவுடன் உச்சம் தொட்டுள்ளது. ஒரு டிஜிட்டல் அடையாள அட்டையினால் பெருமளவு நன்மைகள் உள்ளன. ஒரு தனிநபரின் உடல் நல, மருத்துவ, நிதி தரவுகளுடன் பிற தனிப்பட்ட விவரங்களை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை செயல்படுத்துவதன் நன்மைகளை முதலில் பார்ப்போம்.

1. இலகுவாக சேவைகளை பெற்றுக்கொள்ளல்

சகல தரவுகளையும் உள்ளடக்கிய ஒரு எண்ணிம அடையாள அட்டை அரச மற்றும் தனியார் சேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள உதவுகின்றது. மருத்துவம், வங்கி. சமூர்த்தி போன்ற சமுக நலத் திட்டங்கள், இறைவரித்திணைக்களங்கள் போன்றவற்றுக்கான தனி நபர் ஆவணங்களை இலகுவாக இந்த எணிம அடையாள அட்டையினூடாக பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு தேவைக்கும் பத்திர ஆவணங்கள் கேட்கப்படுவதை தவிர்க்கலாம்.

2. மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள்

மருத்துவப் பதிவுகளை இணைப்பதன் மூலம், டிஜிட்டல் அடையாள அட்டையானது, நோயாளியின் கடந்த கால நோய் வரலாற்றை நிகழ்நேரத்தில் பெற்றுக்கொள்ள மருத்துவர்களுக்கு உதவும். இது துல்லியமான நோயறிதல்களை உறுதிப்படுத்துவதுடன் தேவையற்ற மருத்துவ சோதனைகளை குறைத்து விரைவான சிகிச்சையை எளிதாக்குகிறது.
3. அரச நிர்வாகத்தில் அதிகரித்த செயல்திறன்

நலத்திட்டங்கள், வரிவிதிப்பு மற்றும் வாக்களிப்பு முறைகளை நிர்வகிப்பதில் அரசாங்கங்கள் செயல்திறனை மேம்படுத்த முடியும். போலி மானிய விண்ணப்பங்கள் போன்ற மோசடிகளை கணிசமாகக் குறைக்கலாம். இந்தியாவில் ஆதார் கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டதனால் ghost bebeficieries என்றழைக்கப்படும் போலி பெயர்கள் நீக்கப்பட்டு INR 2.25 இலட்சம் கோடி ரூபாய் வருடாந்தம் சேமிக்கப்படுகின்றது.

4. மேம்படுத்தப்பட்ட நிதிப்பரிமாற்றங்கள்

ஒரு தனிநபரின் ஆவணங்களுடன் வங்கி விவரங்களை இணைப்பதன் மூலம் கடன் விண்ணப்பங்கள், கிரெடிட் ஸ்கோரிங் மற்றும் அரச மானியங்கள் வழங்கலை எளிதாக்கலாம். அத்துடன் பல வங்கி, நிதி நிறுவனங்களில் கணக்குகள், சொத்துக்கள் வைத்திருந்து வருமானவரி ஏய்பது தடுக்கப்படும்.

5. சுற்றுச்சூழல் நன்மைகள்

காகித அடிப்படையிலான அடையாள ஆவணங்களில் இருந்து டிஜிட்டல் கார்டுகளுக்கு மாறுவது, காகிதங்கள் சார்ந்த ஆவணங்களில் தங்கியிருப்பதைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்கலாம்.

அடுத்த பதிவில் இதன் பாதகங்களாக கருதப்படுபவற்றையும் அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதையும் பார்ப்போம்,

#Digital_ID

-Kumaravelu Ganesan –

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *