கலைஞர்கள்

திரு… “குமாரன் ஐயாத்துரை” …. (கலைஞர்) …. இலங்கை.

திரு… “குமாரன் ஐயாத்துரை”   20.06.1948 ஆம் இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் அரிதாஸ் என்ற புனைப் பெயருடன் 1967 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை அரங்கில் மேடையேற்றப்பட்ட “விதி செய்த சதி’ என்ற நாடகத்தின் ஊடாக கலை உலகிற்கு அறிமுகமானவர். அன்று தொடக்கம் இன்று வரை சுமார் 30 வரையான நாடகங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த “பவளத்துக்கன்னி’ அரச நாடகத்தில் போருக்கு முந்திய காலத்தில் வடமாகாணத்தில் பல இடங்களில் 50 வரையான மேடையேற்றங்களையும் அதனைத் தொடர்ந்து “கலையும் கண்ணீரும்’ என்ற அரச நாடகம் 30 வரையான மேடையேற்றங்களையும் கண்டதுடன், போட்டிகளிலும் தங்கப்பரிசினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து நீதிவேந்தன் என்ற அரச நாடகத்திலும் முத்தமிழ் சனசமுக நிலையம் மற்றும் யாழ். கலைக்கழகம் நடாத்திய போட்டியில் “சாம்ராட் அசோகன்’ நாடத்தில் சாம்ராட் அசோகனாகவும் நடித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களான டிங்கிரி … சிவகுரு ஆகியோருடன் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.

நடிப்பில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் இவரது நடிப்பு சிறப்பானது. “நான் உங்கள் தோழன்’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது காதாநாயகனாக நடித்துள்ளார். இது 1978 ஆம் ஆண்டு இலங்கையில் பல திரையரங்குளில் திரையிடப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டது. குறிப்பாக இப்படம் கொழும்பு செல்லமகால் மற்றும் யாழ்ப்பாணத்தில் ராணி திரையரங்கிலும் 50 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட “நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர் ஸ்ரீகாந்துடனும் நடித்துள்ளார். மேலும் “தெய்வம் தந்த வீடு’ என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இவை தொடர்பில் நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண சூழ்நிலை காரணமாக ஆதாரங்கள் அழிவுற்றாலும் இவருடன் பணியாற்றிய கலைஞர்கள் இவரைப்பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் வெளியிடப்பட்ட 300 கலைஞர்கள் என்ற நூலில் இவரது பெயரும் உள்ளடக்கப்பட்டு கலைச்சேவையினை பாராட்டியுள்ளனர். யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவை 2019 ஆம் ஆண்டு இவரது கலைச்சேவையினை பாராட்டி “”யாழ்ரத்னா’ விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பிரதேச செயலக முதியோர் கௌரவிப்பு விழாவில் “சிறந்த திறமையுடையவர் ‘ என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு வெளியிட்பட்ட “யாழ்பாடி கலாசார’ மலரில் இவரைப்பற்றிய நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இவரது கலைச்சேவையைப் பாராட்டி யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை 2024 ஆம் ஆண்டுக்கான  “யாழ் முத்து விருது’ வழங்கி கௌரவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.