மீனவர்கள் விவகாரம்: ராகுல் காந்தி ஜெய்சங்கருக்குக் கடிதம்!
அதேநேரம், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தவும் அவர் இந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.
மீனவர்களை கைது செய்வதோடு மட்டுமன்றி, மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குறித்த மீன்பிடி படகுகளை மீட்க இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரியுள்ளார்.