“உளவு நிறுவனங்கள்” …. தொடர் 44 …. மௌனஅவதானி
இந்தியா தனது உளவு நிறுவனத்தைக் கொண்டு ஒரு மக்கள் புரட்சியையே இலங்கையில் நடத்தி வருகின்றது என்பதை உலக அரசியலில் ஏற்படும் பல்வேறு திருப்பங்களை உற்றுக் கவனிப்போர் எந்த நாடு எந்த நாட்டில் தலையிடுகிறது, ஏன் தலையிடுகிறது, அதற்குரிய காலத்தை, அதற்குரிய சூழலை கவனத்தில் எடுத்து எடைபோட்டு தமது ஊடுருவலை நடத்துகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வார்கள்.
இந்தியா இலங்கையைக் கையாள்வதற்கு இலங்கையில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் சிறுபான்மையினமாக இருந்தமை முதன்மைச் சுலபமான காரணமாக அமைந்தமையேயாகும்.
இந்தியா இரு இனங்களையும் கையாள்வதற்கு தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுதல் என்பதை உதாரணப்படுத்தலாம்.
இலங்கையை ஆக்கிரமிக்க நினைத்த சீனாவினை இலங்கைக்குள் காலூன்றக்கூடாதென்பதில் இந்தியா தனது இராஜதந்திர நகர்வுகளை ஆரம்பிக்கத் தொடங்கியது என்றுதான் பலரும் நம்புவார்கள்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடங்கி பல்வேறு அபிவிருத்திகளுக்கு சீனாவிடம் எதிர்பார்த்திருந்த இலங்கை இறுதியில் சீனாவின் சின்னஞ்சிறு தீவு போன்ற போர்ட் நகரத்தை உருவாக்குவதற்கு வழிவிட்டது.
வழிவிட்டது என்று சொல்வதற்குப் பதிலாக சீனாவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் இலங்கை, பழுதடைந்த படகை கட்டியிழுத்துக் கொண்டு போகும் அதிகளவு வலுவுள்ள படகுக்கு பின்னால் இழுபட்டுப் போவது போல சீனாவின் பின்னால் இலங்கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தது.
இலங்கை பொருளாதார ரீதியாக நலிவுற்று,அபிவிருத்திக்கு நிதி தேவைப்பட்ட போதெல்லாம் சீனாவிடம் உதவியைப் பெற வைக்கின்ற இராசதந்திரநகர்வாக இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதையும் அந்தச் சந்தர்ப்பத்தில்கூட இலங்கைக்கு எந்த உதவிக்கான சமிக்ஞையைக்கூட காட்டக்கூடாதென்பதில் கவனமாக இந்தியா இருந்தது.
பொதுமக்களின் பொதுப் பார்வைக்கு சீனா இலங்கையை ஆக்கிரமிப்பதை இந்தியா கவனிக்காமல் இருக்கின்றதே என நம்ப வைத்த இந்தியா தனது உளவு நிறுவனம் மூலம் இலங்கைக்கு சீனா உதவி செய்கின்ற அனைத்து அலகுகளையும் நேரத்திற்கு நேரமும் நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டேயிருந்தது.
இந்தியாவில் தமிழகம் இருப்பதே இந்தியா இலங்கையைக் கையாள்வதற்கு இலகு ஏதுவாகியது.அங்குள்ள தமிழர்களையும் அரசியல்வாதிகளையும் இலங்கைத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் என்பது போன்ற உணர்வுபூர்வமானதாக காடடிக் கொள்வதற்காக உண்ர்ச்சிபூர்வமாக பேசுவதை ஊக்கப்படுத்தியமை போன்று இலங்கைத் தமிழர்களும் தமது பிரச்சினையைத் தீர்த்து வைக்க இந்திய மத்திய அரசும் தமிழகமும் உதவும் என்று நம்ப வைப்பதில் இந்தியா வெற்றி கண்டது.
இனச்சார்பு நிலையின் வெளிப்பாடாக அவ்வப்போது இலங்கைத் தமிழர்களாலும் தமிழகத் தமிழர்களாலும் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகரமான பேசு;சுக்கள் நடவடிக்கைகளை ஒரே கோட்டில் கொண்டு வந்த இந்தியா இலங்கைக்கு எதிரான சூழ்ச்சியை தெளிவாகவே தனது உளவு நிறுவனம் மூலம் வகுத்தது.
உலகநாடுகளில் எங்கெங்கு இந்தியத்தூதரகங்கள் இருக்கின்றவோ அங்கெல்லாம் இந்திய உளவு நிறவனமான றோவும் தூதரகத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருப்பதும் அந்தந்த நாடுகள் இந்தியா சார்ந்த கொள்கைளில் என்ன நிலைப்பாட்டு அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்பதைக் கவனிப்பதை பெரும் வேலையாகக் கொண்டிருக்கின்றது.
முன்னரைவிட இந்தியாவின் உளவுச் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதற்கு இலகுவாவதற்கும் இந்தியர்கள் பெருமளவில் எல்லா நாடுகளில் தொழில் நிமித்தமாகவும் அதுவும் உயர்பதவிகளில் அவர்கள் இருப்பதும் அதில் கணிசமான தொகையினர் இந்தியாவின் ஒற்றர்களாகவும் வேலை செய்தும் வருகின்றனர்.
அது போன்று இலங்கையைக் கையாள்வதற்கு ஐரோப்பியநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் இந்திய உளவு நிறுவனம் தனது ஒற்றர்கள் மூலமாக புலம்பெயர் தமிழர்களை அதீத தமிழீழப் பற்று மிகுந்த தீவிரப் போக்குடையவர்களாக மாற்றி தனிநாடு சாத்தியமானது என நம்ப வைத்து நிதி உதவிகளை வாரிவழங்க வைத்து அதன் மூலம் இந்தியா தமிழீழத்தை உருவாக்க உதவி செய்யும் அதற்கான இரகசியத் திட்டத்தை இந்தியா வைத்திருக்கின்றது.
அதற்கான இரகசியத் தகவல்களுடன் புலம்பெயர் தமிழர்களை தமிழகத்தில் இருந்து சந்திக்க வநதிருக்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் கசிய விட்டதுடன் அவற்றை காதுவழிச் செய்தியாகவும் தொலைபேசி வழியாகவும்’பொறுத்த ஆட்கள் வந்திருக்கிறார்கள், அலுவல் நடந்து கொண்டிருக்கிறது.
கேள்விப்பட்டன் உண்மையா’ என வியப்புடன் பலரால் பேச வைக்கப்பட்டது மட்டுமல்ல, இந்திய உளவு நிறுவனத்திற்காக ஒற்றர்களாக வேலைபார்க்கும் ஊடகவிய லாளார்களான,பத்திரிகையாளர்களான, பேச்சாளர்களான தமிழகத் தமிழர்களையும் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிர்கள் மத்தியில் அனுப்பி வைத்ததுடன் புலம்பெயர் தமிழர்களின் தமிழீழச் செயற்பாட்டாளர்களின் திட்டங்களை கண்டறிந்து அவற்றை இலங்கையரசிற்கு சொல்லியும் வந்தனர்.
ஒரு புறத்தில் தமிழீழம் சாத்தியமான ஒன்று என தமிழர்களின் மனங்களில் பதிய வைத்த அதே வேளை,தனிநாட்டுத் திட்டத்திற்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவளிக்னக மாட்டோம் என்பதை தமிழர்கள் மத்தியிலும்,இலங்கை அரசிற்கும் சிங்களவர்களுக்கும் தெரியப்படுத்தி வந்தது.
இலங்கையை எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டும் அதைத் தொட வேண்டிய எல்லை ஆண்டுகள் எதுவெனத் திட்டமிடுதல் என்பதற்கமைய,தமிழகத் தமிழர்களை வைத்துக் கொண்டு இந்தியா ஒருபுறத்தில் தமிழர்களுக்கு சாதகமான நாடுதானோ என இலங்கையை தடுமாற வைத்தல் மூலம் இலங்கை, தனக்கு ஆதரவுக்கரம் நீட்டும் நாடாக சீனாவின் பக்கம் சாய்ந்தது.
சீனாவின் பக்கம் இலங்கை சாய்வதையும் சீனாவிடமிருந்து மீளமுடியாதளவிற்கு கடன் வாங்கி கடன்கடலில் மூழ்க வேண்டுமென்பதே இந்தியாவின் பெருந்திட்டமாகும்.
அந்நியச் செலவாணிக்கான நிரந்தரமற்ற வருவாயான சுற்றலாத்துறையை நம்பியிருந்ததே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியாகும்.சுற்றுலாத்துறை என்பது ஒரு உதிரி வருவாயைக் கொடுக்கும் துறை மட்டுயோகும்.
கொரோனாப் பரவல் இத்துறையை வீழ்ச்சியடையச் செய்ய இலங்கைத் திறைசேரி நிலைமை படுமோசமாக,அத்தியாவசியப் பொருட்களையே இறக்குமதி செய்ய முடியாத நிலையிலும்,அரசாட்சியின் தவறான பொருளாதாரநிதி சார்ந்த ஞான அறிவின்மை காரணமாகவும், நாளாந்த தேவைக்கான பொருட்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க உதவும் வாகனங்களின், பணியிடங்களுக்குச் செல்ல உதவும் வாகனங்களின், மக்களைக் கொண்டு செல்லும் பொதுப் பொக்குவரத்து வாகனங்களின் எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்க நாளாந்த வாழ்க்கைக்கான முக்கிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க, அதற்கான காலத்தை நோக்கிக் காத்திருந்த இந்தியா வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.
இலங்கை அரசினுடனான சிங்கள அதிருப்தியாளர்களின் அல்லது வெறுப்பாளர்களின் உதவியுடன் இலங்கையில் சிங்கள மக்களால் முன்னெடுத்துவரும் பெரும் மக்கள் போராட்டத்தை தூண்டி ஏற்படுத்தி நடத்தத் தொடங்கியுள்ளது.
அதே வேளை தனக்கும் நடந்து கொண்டிருக்கின்ற அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமுமே இல்லை என்பது போல இலங்கைக்கு உதவிகளையும் செய்து கொண்டும் இருக்கின்றது.
உலகிலேயே, அடைமழைக்குள்ளும் அணையாமல் தீப்பந்தம் கொண்டு போகும் நுட்பமான செயல்திறன் வல்லமைக்கு ஒப்பான உளவு நிறுவனங்களாகச் சொல்லப்படுபவை அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ,இந்தியாவின் உளவு நிறவனமான றோ, ரஸ்யாவின் உளவு நிறுவனமான இஎப்ஐஎஸ் என்பவற்றைத்தான்.
(தொடரும்…)