இலங்கை
திருமலையில் படையினரின் வசமிருந்த 30 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி
திருகோணமலை உவர்மலை சுற்றுவட்ட வீதி சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (01) திறக்கப்பட்டுள்ளது.
படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான சுற்றுவட்ட வீதி படையினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உவர்மலை மத்திய வீதியினூடாக செல்கின்ற மக்கள் ஆளுநர் செயலகம் அமைந்துள்ள லோவர் வீதியினூடாக திரும்பி வரமுடியும். இவ்வீதி சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டு மக்களின் பயணம் இலகுவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 22ஆம் படைப்பிரிவு உள்ள வீதியூடான சுற்றுவட்ட வீதியை திறப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இந்த வீதி திறக்கப்பட்டதால் உவர்மலையில் உள்ள அனைத்து வீதிகளினூடாவும் சுற்றி வருகின்ற வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.