இலங்கை
மாவீரர் தினம் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல்
மாவீரர் தினம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாரால் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் மாவீரர் தினத்திற்கு தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கொடியினை ஏற்றியமை மற்றும் கொடியினை வைத்திருந்தமை தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசாரால் நீதிமன்றத்தில் பி அறிக்கை ஊடாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை ஆராய்ந்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன்பொன்னுத்துரை வழக்கை அடுத்த வருடம் ஏழாம் மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.