பணயக் கைதிகளை விடுவிக்க ட்ரம்ப் காலக்கெடு!
2025 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப், காசா போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முட்டுக்கட்டையான முயற்சிகள் குறித்து திங்களன்று (02) வெளியான ட்ரம்பின் அறிக்கை மிகவும் வலுவாக இருந்தது.
மேலும் அவர் தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கும் முன் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில் வந்துள்ளது.
இஸ்ரேல் மீதான 2023 ஆம் ஆண்டு கொடிய தாக்குதலின் போது, ஹமாஸ் தலைமையிலான போராளிகள் 250 க்கும் மேற்பட்டவர்களைக் கைப்பற்றினர்.
இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், காசாவில் இன்னும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 101 வெளிநாட்டு மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளில் பாதி பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந் நிலையில் நவம்பரில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், நான் பெருமையுடன் பதவியேற்கும் திகதியான 2025 ஜனவரி 20 க்கு முன்னதாக பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் இந்த அட்டூழியங்களைச் செய்த பொறுப்பாளர்கள் நரக வேதனை அனுபவிப்பாளர்கள் என்று கூறியுள்ளார்.
காசாவில் 33 பணயக் கைதிகள் பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கிட்டத்தட்ட 14 மாத கால யுத்தத்தின் போது அவர்களது தேசிய இனத்தை தெரிவிக்காது கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது.