பலதும் பத்தும்
வானில் தோன்றிய வண்ணக் காட்சி: பின்னணி காரணம் என்ன?
வானில் தோன்றும் அதிசயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. விஞ்ஞானத்தையும் தாண்டி பல ஆச்சரியங்கள் வானில் ஒளிந்துள்ளன. அந்த வகையில்,
பெங்களூரில் பச்சை, மஞ்சள், பிங்க் நிறங்கள் கலந்து அற்புதமான வண்ணங்களில் வானத்தில் ஒரு வெளிச்சம் தென்பட்டுள்ளது.
இந்த வெளிச்சமானது பூமிக்கு மிக அருகில் செல்லும் கால இடைவெளியில்லாத வால் நட்சத்திரத்தால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனைய வால் மீன்களைப் போலில்லாமல் கால இடைவெளியற்ற வால்மீன்கள் கணிக்க முடியாதவை என்பதோடு அரிதிலும் அரிதாகவே தென்படும்.
இவ்வகையான வால்மீன்கள் சூரியக் குடும்பத்துக்கு வெளியில் உள்ளவை.
2023 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள Purple mountain observatoryஆல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வால் நட்சத்திரம், பார்ப்பவர்களுக்கு காட்சி விருந்தாக அமைந்துள்ளது.