இலக்கியச்சோலை
சமூகப் பணிக்கான அங்கீகார விருது!
ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில
பாராளுமன்ற புரூஸ் தொகுதியில் ஆண்டுதோறும் சமூகப் பணியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப் படுகிறார்கள். 2024 ஆம் ஆண்டான இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி ஞாயிற்றுக்கிழமை டாண்டினாங்க் நகரசபை மண்டபத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பகல் 1.00 மணியில் இருந்து 3.00 மணி வரை நடந்த விழாவில் சமூகப் பணியாளர்களின் பணியை அங்கீகரித்து விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார்.
முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்பால் ஈர்ப்பு கொண்ட ஒரு குழு ஒன்றிணைந்து விக்டோரிய தமிழ் கலாச்சார கழகம் என்ற அமைப்பை உருவாக்கியது. அவ்வாறு உருவாக்கியவர்களில் ஒருவரான சங்கர சுப்பிரமணியன் அவ்வமைப்பில் செயற்குழுவில் இணைந்து பணியாற்றினார்.
அதன்பின் அந்த அமைப்பின் உதவி செயலாளராக பொறுப்பேற்று தலைவர் ஆனார். மூன்றுமுறை தலைவராக இருந்து ஏறத்தாழ பத்தாண்டுகள் தொண்டாற்றினார்.
வெள்ளிவிழா கண்ட அமைப்பில் ஆலோசராகவும் தற்போது இருக்கிறார். இவரை மாண்புமிகு புரூஸ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் குடியரிமை மற்றும் பல்லினக் கலாச்சார அமைப்பின் உதவி அமைச்சருமான மாண்புமிகு ஜூலியன் ஹில் அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார்.
திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களை அக்கினிக்குஞ்சு
பாராட்டி மகிழ்கிறது.
பாராட்டி மகிழ்கிறது.