உக்ரேனுக்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தவுள்ளதாக புட்டின் எச்சரிக்கை!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள முடிவெடுக்கும் மையங்களை மொஸ்கோவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையான பயன்டுத்தி தாக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
உக்ரேனின் எரிசக்தி கட்டத்தின் மீது ரஷ்யா ஒரே இரவில் ஒரு “விரிவான” தாக்குதலை நடத்திய சில மணிநேரங்களுக்குப் பின்னர் புட்டினின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ரஷ்ய எல்லையில் உக்ரேனின் மேற்கத்திய ஏவுகணைகளை வீசியதற்கு பதிலடியாக புட்டின் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஏறக்குறைய மூன்று ஆண்டுகால போர் அண்மைய நாட்களில் கூர்மையான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது.
ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பு இரு தரப்பினரும் மேலாதிக்க முயற்சியில் புதிய ஆயுத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.