பலதும் பத்தும்

உயரதிகாரிகளை ஆள் வைத்து திட்டித் தீர்க்க பிரத்யேக சேவை!

“ஒருவேளை எதிர்தரப்பு சண்டைக்கு வந்தாலும், அதை அந்த நிபுணரே எதிர்கொள்வார் என்றும் இந்த திட்டும் சேவையின்போது, வாடிக்கையாளரின் அடையாளம் எந்தநிலையிலும் வெளியே தெரியாது”

அமெரிக்காவில் பணியிடங்களில் தொல்லை தரும் சக ஊழியர்களையும் உயரதிகாரிகளையும் ஆள் வைத்து திட்டித் தீர்க்க அறிமுகம் செய்துள்ள பிரத்யேக சேவை, வரவேற்பை பெற்று வருகிறது.

ஆயிரம் குறைகள், புகார்கள் இருந்தாலும் சிலர் முகத்துக்கு நேராக அவற்றை கொட்டமுடியாது. அப்படி மனதிலேயே புழுங்கிக்கொண்டிருப்பவர்களுக்காக…. நாங்க இருக்கோம் என்று கூறி உதவிக்கரம் நீட்டி உள்ளது OCDA என்ற அமெரிக்க நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் வேலையே தங்கள் வாடிக்கையாளர்கள் கைநீட்டும் நபர்களை நேரில் சென்று திட்டி விட்டு வருவதுதான். இது பட்ஜெட் அதிகம் என்று நினைத்தால், குறைந்த கட்டணத்தில் போனில் திட்டும் வசதியும் இவர்களிடம் உண்டாம்.

குறிப்பாக, பணியிடங்களில் ஊழியர்களை அதிகம் டார்ச்சர் செய்யும் உயரதிகாரிகள், தொல்லை தரும் சக ஊழியர்களை திட்டுவதற்காகவே இந்த சேவையை தொடங்கி உள்ளதாக OCDA நிறுவனரும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் காலிமர் தெரிவித்துள்ளார். OCDA நிறுவனத்திடம் தங்களின் புகார்களை பாயிண்டு பாயிண்டாக வாடிக்கையாளர்கள் எடுத்து வைத்தால் போதுமானது. புகாருக்கு உள்ளான நபரின் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ தங்களின் பயிற்சி பெற்ற நிபுணர்களை OCDA நிறுவனம் அனுப்பி வைக்கும்.

புகாருக்கு உள்ளான நபரை எப்படி திட்ட வேண்டும் என்னென்ன திட்டவேண்டும் என்பதை பட்டியல் போட்டும் நிபுணரிடம் அந்த நிறுவனம் கொடுத்துவிடும். அதை அப்படியே பின்தொடர்ந்து, வாடிக்கையாளர் எப்படி திட்டவேண்டும் என்று நினைத்தாரோ அதே ஆவேசத்துடன் எதிர்தரப்புக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துவிடுவார் அந்த நிபுணர். ஏன் வேலையிவிட்டு தூக்குனீங்க, ஏன் பிரோமசன் தரலை, ஏன் பாகுபாடு பாக்குறீங்க? இப்படிலாம் கூட திட்டலாம். ஆனா வாடிக்கையாளரின் வேலைக்கு எந்த பாதிப்பும் வராது என்ற உத்தரவாதத்தையும் தருகிறது OCDA.

ஒருவேளை எதிர்தரப்பு சண்டைக்கு வந்தாலும், அதை அந்த நிபுணரே எதிர்கொள்வார் என்றும் இந்த திட்டும் சேவையின்போது, வாடிக்கையாளரின் அடையாளம் எந்தநிலையிலும் வெளியே தெரியாது என்றும் காலிமர் கூறியுள்ளார்.பணியிடங்களில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது, வரம்பு மீறிய செயல்களுக்கு பதிலளிப்பது, ஊழியர்களின் மரியாதையை மேம்படுத்துவதுதான் தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டும் நிபுணர்கள் பதவிக்கு ஆட்சேர்க்க OCDA நிறுவனம் அறிவித்துள்ள நிபந்தனைகளும் கவனம் பெற்றுள்ளது. தங்கள் குழந்தைகளை அடிக்கடி திட்டம் செய்யும் பெற்றோராக இருக்க வேண்டும், ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.