சக்தியை பறிக்க முடியாது; ஆறுதல் சொன்ன கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தனது தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முதல்முறையாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் 312 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் 226 இடங்களை மட்டுமே பிடித்தார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, கமலா ஹாரிஸ் முதல்முறையாக தனது ஆதரவாளர்களுக்காக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளள்ள அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது; நான் உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உங்களின் உள்ள சக்தியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது.
நவ.,5ம் தேதிக்கு முன்பு உங்களிடம் இருந்த சக்தியும், நோக்கமும், இப்போதும் உள்ளது. இதில், உங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான திறனும் அனைவரிடத்தில் உள்ளது. ஆகவே, எப்போதும், யாராலும், எந்த சூழ்நிலையாலும் உங்களின் சக்தியை பறிக்கவே முடியாது, எனக் கூறினார்.
அவரது இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், கமலாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.