பலதும் பத்தும்

சீனாவில் ஒரு மணிநேரம் குட்டித்தூக்கம் கொடுத்த ரூ.4 கோடி!

அலுவலக நேரத்தின் போது தூங்கியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியருக்கு, சீன கோர்ட் ரூ.4 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டு உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;

சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் கெமிக்கல் நிறுவனம் ஒன்று உள்ளது. இந் நிறுவனத்தில் 2004 ம் ஆண்டு முதல் ஜாங் என்பவர் பணியாற்றி வந்தார். இந்தாண்டின் தொடக்கத்தில் பணி நேரத்தில் மதியம் ஒரு மணி நேரம் தூங்கி உள்ளார். அவர் தூங்கியது, நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமிராவில் பதிவானது. இதற்கு முதல் நாள், அவர் கூடுதலாக நள்ளிரவு வரை அலுவலகத்தில் பணியாற்றியதே காரணம் என்று தெரிகிறது.

2 வாரங்கள் கழித்து, நிறுவனத்தின் மனிதவள துறையிடம் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில், ஜாங் தூங்கியது பற்றியும், அதுதொடர்பாக தொழிலாளர் சங்கத்துடன் ஆலோசனை நடத்தியது பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. பினனர், நிறுவனத்தின் விதிகளை மீறியதாக கூறி அவர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ஜாங், கோர்ட்டின் கதவுகளை தட்டினார். இவரது முறையீட்டை ஏற்ற நீதிமன்றம், வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்த நிறுவனத்துக்கு ரூ.4 கோடி அபராதம் விதித்தும், அதை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறி உள்ளதாவது; நிறுவனத்துக்கு ஒரு ஊழியரை நீக்கவோ, பணியில் சேர்க்கவோ முழு அதிகாரம் உண்டு. ஆனால் அதே நேரத்தில் ஊழியருக்கு எவ்வித இழப்பும் இதனால் இருக்கக்கூடாது.

மனுதாரர் தூங்கியது முதல் முறையாக நடந்த குற்றம். அதன் காரணமாக நிறுவனத்துக்கு எவ்வித இழப்பும் நேரவில்லை. பாதிக்கப்பட்டவர் பல ஆண்டுகளாக வேலை செய்துள்ளார். பணிக்காலத்தில் அவருக்கு பதவி உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்டவையும் தரப்பட்டு உள்ளது. காரணமில்லாமல் பணிநீக்கம் செய்தது தவறு. பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.4 கோடி நிறுவனம் தரவேண்டும்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிமன்றம் கூறி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.