ஆசன சர்ச்சை: வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு
புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளது.
முகநூல் சமூக வலைதளத்தில் இது தொடர்பில் அவர் வெளியிட்ட தகவலை விசாரிப்பதற்காக சிவில் செயற்பாட்டாளர்களால் இந்த முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்றைய தினம் எந்தவொரு ஆசனத்திலும் அமர்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா சம்பிரதாயபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் ஆசனத்தில் அமர்ந்தார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் ஆசனம் என்றும் வேறு ஆசனத்தில் அமருமாறும் அர்ச்சுனா எம்.பி யிடம் நாடாளுமன்ற படைக்கள சோவிதர் ஒருவர் கேட்டுக்கொண்டார் இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ச்சுனா எம்.பி பணியாளருடன் விவாதித்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்.
இந்தவிடயம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலானது. ஆகவே இதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அவருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.