பருவநிலை மாற்றத்துக்கான முயற்சி; 10 ஆவது இடத்தில் இந்தியா
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் முயற்சிகளுக்காக மதிப்பிடப்பட்ட 60 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வருடாந்த ஐ.நா பருவநிலை மாநாடு அஜர்பைஜனின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன்போது பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு தரவரிசை வெளியிடப்பட்டது.
கரியமில வாயு உமிழ்வுகள், புதுப்பிக்கத்தக்க மற்றும் பருவநிலைக் கொள்கையின் அடிப்படையில் நாடுகளின் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் அதிக செயல்திறன் கொண்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் தனிநபர் உமிழ்வு மற்றும் எரிசக்தி பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
அதன்படி உலக அளவில் பசுமை ஆற்றலில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறது.
உலகின் மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயு உமிழ்வு நாடாகவும் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவும் 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வை அடைய இந்தியா உறுதிகொண்டுள்ளது.