முதல் ஒன்லைன் நீதிமன்றம்: 24 மணித்தியாலமும் இயங்கும்
இந்தியாவின் முதல் ஒன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர் நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது.
இந் நீதிமன்றத்தை 24 மணித்தியாலமும் பயன்படுத்தலாம்.
வழக்குப் பதிவு செய்தல், வழக்கு அனுமதி, முன்னிலைப்படுத்துவது, விசாரணை மற்றும் தீர்ப்பு என அனைத்தும் ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டமாக காசோலை வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றன.
உலகில் எந்த மூலையிலிருந்தும் இந் நீதிமன்றதில் வழக்குகளைப் பதிவு செய்யலாம்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் தங்களின் பிணை மனுக்களையும் ஒன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் .
நிலுவையிலுள்ள வழக்குகளை குறைப்பது மற்றும் சட்ட ரீதியான தீர்வுகளை விரைவுப்படுத்துவது ஆகியவைதான் இந்த ஒன்னலைன் நீதிமன்றத்தின் நோக்கம்.
இந் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வழக்கு விசாரணை நிலவரங்களை உடனே தெரிவிக்கும்.
இந் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களுமே டிஜிட்டல் முறையில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கடதாசி ஆவணங்களுக்கு இங்கு இடமில்லை. வழக்குகள் நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.