செய்திகள்
உத்தரப் பிரதேசத்தில் பேருந்து – லொறி விபத்து; ஐவர் உயிரிழப்பு
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பேருந்தும் லொறியும் மோதிக் கொண்டதில் ஐந்து மாத குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
டில்லியிலிருந்து அஸாம்கரை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறியின் பின்புறத்தில் மோதியுள்ளது.
இதில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு, 15 இற்கும் அதிகமானோர் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிக்குண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.