புதிய நாடாளுமன்றம்; 4 முக்கிய நியமனங்கள்!
தேசிய மக்கள் சக்தியின் (NPP) எம்.பி.க்களான கலாநிதிமொஹொமட் ரிஸ்வி சாலி மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, NPP கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹொமட் ரிஸ்வி சாலி பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
அவரின் பெயர் அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டது மற்றும் அமைச்சர் சரோஜா பால்ராஜால் ஆதரிக்கப்பட்டது.
இதேவேளை, குழுக்களின் பிரதித் தலைவராக NPP நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டார்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகரவின் பெயரை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி முன்மொழிந்தார்.
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச சபையின் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டார்.
புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக NPP நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார்.