முச்சந்தி

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனம் மீளப்பெறப்பட வேண்டும்

இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும். அந்த தேசியபட்டியல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். எமது தமிழரசுக் கட்சியில் பெண்களுக்கான உரிய இடம் வழங்கப்பட வில்லை என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கடந்த 2024 ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமைஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், .

இலங்கை தமிழரசு கட்சியினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் ஒரு பெண்ணுகு வழங்க வேண்டும் என்பதே எனதும் மக்களதும் நிலைப்பாடாகும். நீங்கள் தொடர்ச்சியாக வடபகுதிக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொண்டிருப்பதானது மிகவும் ஒரு பிழையான ஒரு செயலாக நான் கருதுகின்றேன் .

குறிப்பாக வடக்கு கிழக்கு என்று பிரிக்காமல் வடகிழக்கு இணைந்த ஒரு செயற்பாட்டை தான் இலங்கை தமிழரசு கட்சி செய்கின்றது ஏனைய கட்சிகளை வடகிழக்கில் மக்கள் ஓரங்கட்டி இருக்கின்றார்கள். எனவே எங்களுடைய கட்சியை பலப்படுத்த வேண்டுமாயின் கட்சியினுடைய தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தலைவர் மற்றும் செயலாளருக்கு இவ்வாறான தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

இனியாவது தேசிய பட்டியல் தொடர்பான விடயத்தை ஆராய்கின்ற போது கிழக்கு மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க வேண்டும். வெறுமனே 11 பேர் அல்லது 12 பேர் கூடி எடுக்கின்ற குழு முடிவுகளை இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இன்று எமது அயராத முயற்சியினால் தான் தமிழ் தேசியம் கோலோச்சியுள்ளது.

வடக்கில் தமிழரசு கட்சி தோல்வி கண்டிருக்கின்றது என்பதனை எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்து இருக்கின்றார் இதற்கு காரணம் என்ன என்பதை நாம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் உங்களை நிராகரித்திருக்கின்றார்கள். மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்கள் செயல்பாடு அமையாத காரணத்தினால் தான் மக்கள் இன்று தமிழரசு கட்சியை தேர்தலில் நிராகரிக்கின்றார்கள்.

இன்று கிழக்கு மக்கள் தந்த ஆணையை பெற்றுக் கொண்டு நீங்கள் ஒரு பொதுச் செயலாளராக இருந்து கொண்டு அந்தப் தேசியப் பட்டியல் பதவியை பெற்றுச் சென்றமை எவ்வாறு நியாயம் ஆகும். எவ்வாறு இதை நாம் ஏற்றுக் கொள்வது. ஏழு ஆண்கள் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவாக இருக்கின்ற வேளையில் ஒரு பெண்ணை நியமிக்க ஏன் நீங்கள் எவரும் சிந்திக்கவில்லை.இப்பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்களை நாங்கள் கண்ணியமாக பார்க்க வேண்டும். இந்த ஏழு ஆசனங்களையும் பெற்று கொள்வதற்கு பல பெண்கள் எமக்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு வாக்களித்திருக்கின்றார்கள்.

அவர்களது வாக்கு பலத்தினை உதாசீனம் செய்யாமல் நிச்சயமாக இந்த தேசிய பட்டியல் ஆசனத்தில் மாற்றம் கொண்டு வந்து பெண்களுக்கு வழங்குவது மிக அவசியம். அத்துடன் அவசரமாக தமிழரசு கட்சியின் தலைவர் அல்லது செயலாளர் பதவி என்பது கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும். இதனூடாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற எமது கட்சியினை சுத்தப்படுத்தி இலங்கை தமிழரசு கட்சியை அனைவரும் சேர்ந்து பயணம் செய்வதற்கு முன்வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.