94 ஆண்டுகளில் 9 சொட்டு மட்டுமே! உலகின் மிக நீண்ட அறிவியல் சோதனை: கின்னஸ் சாதனை
பொறுமையை சோதிக்கும் பிட்ச் டிராப் சோதனை விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.
நேரத்தின் மீதான கருத்துகளை மீறும் அளவுக்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிகவும் பொறுமையாக நடைபெற்று வரும் விஞ்ஞான முயற்சியான பிட்ச் டிராப் சோதனை (Pitch Drop Experiment) உலகின் மிக நீண்ட கால சோதனைக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
1927 இல் அவுஸ்திரேலிய இயற்பியலாளர் தாமஸ் பாரனெல்(Thomas Parnell,) தொடங்கிய இந்த சோதனை, பிட்ச்(pitch) எனப்படும் மிகவும் பாகுத்தன்மை கொண்ட பொருளின் அசாதாரண பண்புகளை வெளிப்படுத்துகிறது.
தார் போன்ற இந்த பொருள், தண்ணீரை விட பில்லியன் மடங்கு தடிமனாக இருந்தாலும், திடமானதாக தோன்றினாலும், உண்மையில் திரவமாகும்.
ஆராய்ச்சியாளர் பாரனெல் இந்த பிட்ச் எனப்படும் பொருளை சூடுபடுத்தி ஒரு கண்ணாடிப் புனலில் ஊற்றி, குளிர்ந்து திடப்படுமாறு செய்துள்ளார்.
1930 இல், அவர் புனலின் அடிப்பகுதியை வெட்டி ஒன்றை ஏற்படுத்தி, நூற்றாண்டு கால நீளும் காட்சிக்கான களத்தை அமைத்து இந்த அறிவியல் சோதனையை சாதனையை உருவாக்கியுள்ளார்.
திரவத்தின் தன்மை காரணமாக சோதனை தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து தற்போது வரை வெறும் 9 சொட்டுகள் மட்டுமே இதுவரை புனலில் இருந்து கீழே விழுந்துள்ளது.
முதல் சொட்டானது 8 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், அதன் 9வது சொட்டு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த மெதுவான அறிவியல் சோதனை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பாரனெல் கட்டிடத்தில் இன்னும் நடந்து வருகிறது, இதில் நீங்களும் அங்கமாக வேண்டும் என்றால் சோதனையை நேரில் சென்று பார்வையிடலாம்.
அல்லது நேரடி ஒளிப்பரப்பில் கலந்து கொண்டு இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாகலாம்.