ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கம்-ஜனாதிபதி!
பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும் என்பதுடன் மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் ஜனரிதபதி இதனை தெரிவித்தார்
பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும் என்றும் ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அதிககாரம் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தது.
அதிகாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. எந்தவொரு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
அத்துடன் பல புதியவர்கள் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்சார்ந்தவர்களை மக்கள் தெரிவு செய்துள்ளார்.மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையுடனேயே மக்கள் அவர்களை தெரிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் எமக்கு கிடைத்த பாரிய வெற்றியின் ஊடாக எமது பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்பின்னர் நாம் வெற்றிகரமான முறையில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்