பலதும் பத்தும்
சீப்பு ஜெல்லி: வயதை மாற்றியமைக்கும் உயிரினம்
விலங்குகளின் சில வாழ்க்கை சுழற்சி முறைகள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும்.
அந்த வகையில், விலங்குகளின் பிறப்பு, முதுமை, இறப்பு போன்றவற்றுடன் வாழ்க்கை சுழற்சியின் காரணியான வயதை மாற்றியமைக்கும் திறன் கொண்ட முதுகெலும்பில்லாத உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
சீப்பு ஜெல்லி எனப்படும் மீன்கள் தீவிர மன அழுத்தத்தின்போது அதன் லார்வா எனப்படும் இளம் பருவத்துக்கு சென்றுவிடுமாம்.
இவ் வகை மீன்கள் நகரும் போது ஒளி காட்சியை உருவாக்குகின்றன.
மேலும் கொலோப்ளாஸ்ட்கள் எனப்படும் ஒட்டும் செல்களைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள கடல்களில் இவை வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.