பகவத்கீதையை வைத்து பதவியேற்ற அமெரிக்க பெண் அதிகாரி
இது வரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பகவத் கீதையை முன்வைத்து வாசித்து அமெரிக்க பெண் அதிகாரி உறுதிமொழி எடுத்து பதவியேற்றார்.
அமெரிக்காவில் டிரம்ப் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில் வெள்ளை மாளிகை மற்றும் உயர் முக்கிய பொறுப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அமெரிக்க உளவுத்துறை ( intelligence) டைரக்டராக துளசி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியில் டிரம்ப்புக்கு எதிராக போட்டியிட்டு கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். தற்போது டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். இதனால் டிரம்ப் இந்த வாய்ப்பை அளித்துள்ளார். துணை அதிபர் பொறுப்புக்கும் அவரது பெயர் பரிசீலனையில் இருந்தது.
இவரது பொறுப்பேற்பு விழாவில் பகவத்கீதையை படித்து உறுதிமொழி எடுத்து கொண்டார். இவர் அமெரிக்க பிரஜை என்றாலும் ஹிந்து மத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பகவத்கீதையை முழுவதுமாக படித்து நூல் காட்டும் வழியில் வாழ்ந்து வந்துள்ளார். பகவான் கிருஷ்ணர் தனது வாழ்நாள் முழுவதும் தனக்கு அறிவையும் ஆன்மிக இளைப்பாறுதலையும் அளித்துள்ளார் என்பதை துளசி பலமுறை கூறியுள்ளார். மேலும் இவர் ஆய்வுகள், தற்காப்புகலைகள், யோகா, கீர்த்தனைகள் பாடுவது போன்றவற்றிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவராம்.
2008 ல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், மேஜர் என பல உயர் பொறுப்புகளில் இருந்தவர். அமெரிக்க வெளியுறவு கொள்கை அதிகாரி, ஈராக், குவைத்தில் அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.