ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வம்; இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டாத மக்கள்
ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வம் காட்டிய மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் அந்த ஆர்வத்தை காட்டவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சகல இடங்களில் இருந்தும் கிடைக்கும் தகவல்களின் படி ஜனாதிபதித் தேர்தலை விடவும் இம்முறை தேர்தலில் ஆர்வம் குறைவாகவே இருக்கின்றது. மக்கள் அந்தளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. சிலவேளை வேட்பாளர்கள் யார் என்று தெரியாது இருக்கலாம். 70 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவாக இருக்கலாம்.
அரசாங்கம் ‘எல்’ போர்ட்டாக இருந்தாலும் பாராளுமன்றம் அப்படி இருந்துவிடக் கூடாது. அங்கே அனுபவம் உள்ளவர்கள் இருக்க வேண்டும் என்பதனையே கூறினேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை முழுமையாக செயற்படுத்துமாறே கேட்கின்றேன்.
நிறைவேற்றுத்துறை தேசிய மக்கள் சக்தியாக இருக்கலாம். ஆனால் அரசாங்கம் யாருக்கு என்று தெரியாது. பெரும்பான்மை கிடைக்குமா? கிடைக்காதா? என்பதனை இப்போது கூறுவது கடினமாகும் என்றார்.