வடக்கில் எமக்கு வெற்றி கிடைக்கும்; நம்பிக்கை உண்டு
வடக்கு மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதால் இந்தத் தேர்தலில் வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கு விசேட வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு பஞ்சிகாவத்த அபேசிங்காராமய விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குகு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
வடக்கு மக்கள் நீண்ட காலமாக புதிய மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக பிரதிநிதித்துவப்படுத்தய முகாம் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாற்றத்திற்காக புதிய அரசியல் சக்தியொன்று உருவாகியுள்ளதை புரிந்துகொண்டனர். இதனால் அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் தேசிய மக்கள் மீது இருக்கின்றது. இதன்படி எங்களுக்கும் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை இருக்கின்றது.
எமது நாடு சம்பிரதாயமாக செல்லும் பாதையிலேயே செல்வதென்றால் நாங்கள் அவசியமில்லை. ஆனால் இந்த பயண பாதையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அந்த மாற்றத்திற்கான பிரதான திருப்புமுனையாக வடக்கு, கிழக்கு, தெற்கிலுள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஆட்சியை கட்டியெழுப்ப வேண்டும். கடந்த காலங்களில் வடக்கிற்கு எதிரான தெற்கு அரசியலும் தெற்கிற்கு எதிரான வடக்கு அரசியலுமே இருந்தன. ஆனால் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கை இணைக்கும் அரசியலையே நாங்கள் செய்கின்றோம். இதன்படி வடக்கில் எமக்கு விசேட வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்!
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 9,066 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,612 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்