இம்முறை பொதுத் தேர்தலில் 10 வீதத்தால் குறைந்த வாக்களிப்பு
10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 65 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இது 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விடவும் 10 வீதம் குறைவாகும்.
2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு நாடு முழுவதும் 16,263,885 வாக்காளிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 75.89 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 93.97 வீதமான வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவு செய்யப்பட்டிருந்தன. 4.58 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு நாடு முழுவதும் 16,263,885 வாக்காளிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 78 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இதில் 95.57 வீதமான வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவு செய்யப்பட்டிருந்தன. 4.52 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு நாடு முழுவதும் 14,088,500 வாக்காளிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 61.26 வீதமான வாக்குகளே அளிக்கப்பட்டிருந்தன. இதில் 93.08 வீதமான வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவு செய்யப்பட்டிருந்தன. 6.92 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த நிலையில் 79.46 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இதில் 97.8 வீத வாக்குகள் செல்லுபடியானதுடன் 2.2 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.