இன்று பாராளுமன்றத் தேர்தல்; 196 ஆசனங்களுக்காக 8,352 பேர் களத்தில்
13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதற்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தேர்தல் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தேர்தலில் சகல மாவட்டங்களிலும் 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 196 ஆசனங்களுக்காக சகல மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 690 குழுக்களை சேர்ந்த 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 19 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 966 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,765,351 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 17 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 902 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் . தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவதற்காக 1,881,129 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 13 சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,024,244 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 12 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,191,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 184 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 429,991 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 11 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 308 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 605,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
காலி மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 264 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 903,163 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 220 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 686,175 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் 250 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 520,940 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் , 21 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 27 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 459 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 306,081 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 22 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் , 42 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 640 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 217 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 15 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 10 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,417,226 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 15 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 429 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 663,673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 741,862 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
பொலனறுவை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் , 2 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 120 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 351,302 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 240 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 705,772 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 3 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 399,166 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இரத்தினப்புரி மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 923,736 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் , 4 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 216 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 709,622 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை பாராளுமன்றத்திற்கு மொத்தமாக தெரிவு செய்யப்படவுள்ள 225 பேரில் மக்களால் வாக்குகளின் மூலம் மாவட்ட ரீதியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 196 பேர் தவிர்ந்த மிகுதி 29 பேரும் நாடளாவிய ரீதியில் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்திற்கு அமைய தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகவுள்ளனர்.
வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லுதல்
வாக்களிப்பதற்காக செல்லும் போது வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை , தேர்தல்கள் ஆணையாளரினால் அனுமதியளிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள், வெளிநாட்டு கடவூச்சீட்டு, சாரதி அனுமதிபத்திரம் , முதியோர் அடையாள அட்டை அல்லது கிராம அலுவலரினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
வாக்கு எண்ணும் பணிகளும் – தேர்தல் முடிவும்
மாலை 4 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னர் அனைத்து வாக்கு பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களின் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். வாக்குப் பெட்டிகள் அனைத்தும் கிடைக்கப்பெற்ற பின்னர் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
முதலில் மாலை 4.15 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் இரவு 7.15 மணியளவில் தொகுதி ரீதியிலான மற்றைய வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நள்ளிரவுக்குள் தபால் மூல வாக்கு முடிவு வெளியாக ஆரம்பிக்கலாம் என்பதுடன், தொகுதி ரீதியிலான முடிவுகள் நள்ளிரவுக்கு பின்னர் வெளியாகலாம் என்பதுடன் மாவட்ட ரீதியிலான இறுதி முடிவுகள் நாளை நண்பகலுக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மாவட்ட ரீதியிலான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் விருப்பு வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. விருப்பு வாக்கு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேர்தலையொட்டி பொலிஸார் நாடு பூராகவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். 64 ஆயிரம் வரையான பொலிஸாரும் அதற்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் விசேட அவதானமுடைய பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சகல வாக்களிப்பு நிலையங்களிலும் இரண்டு பொலிஸார் பாதுகாப்பிலிருப்பதோடு, வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியேயும் பொலிஸார் பாதுகாப்பை மேற்கொள்கின்றனர். அத்துடன் வாக்குகளை எண்ணும் இடங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் தேவையேற்பட்டால் பாதுகாப்பு கடமைக்கு அழைக்க முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.