பலதும் பத்தும்
ஏஐ தொழில்நுட்ப மாற்றத்தில் இந்தியா முதலிடம்
உலகளாவிய ரீதியில் ஏஐ தொழில்நுட்பம் தாக்கம் செலுத்தி வருகிறது. அதன்படி, ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது பின்டெக், சொப்ட்வேர், வங்கி ஆகிய துறைகளின் செயல்பாடுகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது.
சுமார் 30 சதவீதமான இந்திய நிறுவனங்கள் இதுபோன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதால் தங்களின் மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.