முச்சந்தி

திரு. சீமான் அவர்களே! …. ஏலையா க.முருகதாசன்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசைக் கோரப் போவதாகக் கூறியுள்ளார்.

அதற்குக் காரணம் இலங்கைக் கடலுக்குள் மீன்பிடித்த இந்தியத் தமிழ் மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததுதான்.ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைவது சர்வதேசக் கடல் சட்டத்தை மீறுவதாகும்.

இது சீமான் அவர்களுக்குத் தெரியும்.தனது கட்சி தமிழ்நாட்டை ஆள்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அலகுகளை தெளிவாக எடுத்து வைப்பவர்,அப்படிப்பட்ட அவரின் அறிவின் மீது சந்தேகம் வந்துள்ளது.

அவரின் பேச்சில்,இலங்கை ஒரு சிறு தீவு இந்திய ஒரு துணைக் கண்டம்,நாங்கள் எதையும் மீறுவோம் இலங்கை அரசு எதையம் கேடகக்கூடாதென்ற திமிர் தெரிகின்றது.

இந்தியாவில் தமிழர்களாகவிருந்தாலும் அவர்கள் இந்தியர்கள்தான்.அவர்களை இந்தியர்களாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பது இந்தியா செய்யும் திருட்டுத்தான்.இந்தியா இலங்கை மீன்களைத் திருடுகிறது என்று குறிப்பிடுவது எதனாலென்றால்.

ஒரு நாட்டின் குடிமகன் இன்னொரு நாட்டின் சட்டத்தை மீறினால் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அந்தந்த நாடுகளே.

தனது குடிமகன் அத்தவறைச் செய்யாதிருக்கும் வண்ணம் வழிநடத்தியிருக்க வேண்டும்.நமது மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் மீன் பிடித்தது தவறுதான் என எப்போதாவது இந்தியா சொல்லியிருக்கின்றதா இல்லவே இல்லை.

தவறு என்று தெரிந்தும் இலங்கையிடம் மனவருந்தவோ மன்னிப்புக் கேட்கவோ இந்தியா முன்வரவில்லை.

காரணம் இலங்கையின் நிலப்பரப்பும்,அங்குள்ள மக்களின் தொகையையும் தனது நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்து அலட்சியப்படுத்தலே காரணமாகும்,இது இந்தியாவின் திமிர் என்றுகூடச் சொல்லலாம்.

ஓவ்வொரு மனிதனும்: பெறுமதிமிக்கவன்,அவன் வாழும் நிலம் பெறுமதி மிக்கது,அவன் வாழும் வாழ்க்கை பெறுமதி மிக்கது.

இதுவே பொதுவான மானிடப் பண்பும் அரசியற் கட்டமைப்பின் ஒழுங்குமாகும்.இதற்கமையத்தான் உலக நாடுகள் தமது குடிமக்களை வழிநடத்தி வருகின்றனர்.

அது போன்றதே இலங்கை என்ற நாடும் அந்த நாட்டு மக்களும்.இலங்கையும் அந்த நாட்டு மக்களும் எடுப்பார் கைப்பிள்ளைகளுமல்ல

கிள்ளுக்கீரைகளுமல்ல.இலங்கை இறைமையுள்ள நாடும் அங்கு வாழும் மக்களும் பெறுமதிமிக்கவர்கள்.

இலங்கை க்கடலில் இந்தியத் தமிழ் மீனவரகள்; மீன்பிடிப்பதை தடுத்து நிறத்த வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

ஒரு நாடு தனது கடல் வளத்தைச் சுரண்ட வரும் எவரையும் கைது செய்யும் அதிலென்ன தவறு இருக்கின்றது.

அதிலும் இந்தியத் தமிழ் மீனவர்களின் இழுவைப் படகுகள் இலங்கைக் கடலுக்குள் உள்ள மீன்வளத்தை கடல்பாரை போட்டு வறுகி எடுப்பது போல மீன்குஞ்சுகளையும் முட்டைகளையும் அள்ளிச் செல்லுகின்றன.

இதை இந்தியாதான் சரி செய்ய வேணும்.இலங்கைத் தமிழர்கள் உணர்வுபூர்வமாக தமிழர்கள் என்ற ரீதியில் தமிழுணர்வைப் பேணலாமே தவிர அவர்கள் இலங்கைக் கடல் வளத்தைச் சூறையாடுவதைக் கண்டித்தேயாக வேண்டும்,அனுமதிக்க முடியாது.

சட்டம் வேறு ஓரினம் என்ற உணர்வு வேறு.தமிழகத் திரைப்படங்களைப் பார்ப்பதோ,அங்கிருந்து வரும் நூல்களை வாசிப்:பதோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதோ தமிழகம் தொட்டு இந்தியாவுக்கு சுற்றுலாப் போவதோ இன்னும் தமிழகத் தமிழர்களை நண்பர்களாக,ஏன் திருமணத் தொடர்புகள் ஏற்படுமாயின் உறவினர்களாகக் கொள்வதோ அது வேறு,ஆனால் இலங்கைத் தமிழர்கள் இலங்கையர்களாக மீனைக்கடலில் இருந்து திருடுவதை தமிழர்கள் என்பதற்காக ஆதரிக்கவே முடியாது.

ஒரு வீடு புகுந்து திருடுவதற்கு ஒப்பானதே இது.இது போன்ற எனது கருத்தை எனது முகநூலில் பலமுறை பதிவு செய்திருக்கிறேன்.

எனது முகநூல் வட்டத்தில் உள்ள இந்தியத் தமிழர்கள் இலங்கைக் கடலுக்குள் இந்தியத்தமிழ் மீனவர்கள் மீன்பிடிப்பது தவறுதான் ஒரு போதுமே தெரிவிக்கவே இல்லை,மன வருந்தவும் இல்லை.

சிலர் எனது முகநூலிலிருந்து விலகியுள்ளார்கள்.இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்கூட இந்தியத் தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் கெடுகிறது என்று இந்திய மத்திய அரசிற்குச் சொன்னதே ; இல்லை.இலங்கை அரசிற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவும் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று வாய்பொத்திக் கூனிக்குறுகி தோழிலை போட்டிருந்த சால்வையை இடுப்பிலை கட்டிக் கொண்டு அசடு வழிந்த முகத்துடன் இந்தியாவிடம் ஆலோசனை கேட்கும் வெட்கம் கெட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

திரு.சீமான் அவர்களே இலங்கைக் கடலில் இந்தியத் தமிழ் மீனவர்கள் மீன்பிடித்தால் அவர்களைக் இலங்கைக் கடற்படை கைது செய்யும்,அதில்: தவறு எதுவும் இல்லை.இந்நடவடிக்கை சர்வதேசக் கடல் சட்டத்தின்படி முற்றிலும் சரியானதே.தாங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதைத் தெரிந்து பேசுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.