உலகம்
புட்டினுடன் ட்ரம்ப் பேசியதாக வெளியான செய்திகளுக்கு ரஷ்யா மறுப்பு!
புட்டினுடன் ட்ரம்ப் பேசியதாக வெளியான செய்திகளுக்கு ரஷ்யா மறுப்பு!
47 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேசியதாக வெளியான செய்திகளை கிரெம்ளின் திங்களன்று (11) மறுத்துள்ளது.
தற்போது ட்ரம்புடன் பேசுவதற்கு புட்டினுக்கு எந்த திட்டமும் இல்லை என்று கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.
ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் கடந்த வியாழன் அன்று நடந்ததாக வொஷிங்டன் போஸ்ட் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த உரையாடலின் போது, டொனால்ட் ட்ரம்ப், உக்ரேன் போரை அதிகரிக்க வேண்டாம் என்று புட்டினுக்கு அறிவுறுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் அந்த தகவலை தற்சமயம் மறுத்துள்ள ரஷ்யா, அது வெறும் கட்டுக்கதை என்று சுட்டிக்காட்டியுள்ளது.