இலங்கை
யாழில் 50,000 வாக்குகள் நிராகரிக்கப்படும் அபாயம்?
யாழ். மாவட்டத்தில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் சார்பில் சுயேட்சைக்குழு -14 இல் போட்டியிடும் அக்குழுவின் தலைவரும், முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா யாழில் ஊடக சந்திப்பு ஒன்றை நேற்று (10) நடத்தினார்.
இதன் போது 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் பலர் தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதற்கான பல சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதாவும், இதனால் தான் உட்பட பலர் விலகியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா குறிப்பிட்டார்.