தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தேசியம் என்ற மந்திரச் சொல்லில் கட்டுண்டவர்கள்.
கஜேந்திரகுமாரின் தேசியத்தை ஆதரிக்கலாம். ஏனெனின் அன்றும் இன்றும் ஒரே “தேசியம்” பேசுகின்ற கட்சி அவருடையது
டக்ளள் தேவானந்தா தனியான வாக்கு வங்கி உடையவர். அவரால் பயனைடந்தவர்கள் அவரைக் கைவிடமாட்டார்கள். வெற்றிக்கோட்டைத் தாண்டுவது சற்றே கடினமானது.
தேசிய மக்கள் சக்திக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும். அனுரகுமார ஆட்சிக்கு வந்து இன்னும் இரண்டுமாதம் ஆகவில்லை. மூன்று அமைச்சர்களோடு நாடு நடக்கிறது. இப்போதே அது செய்யவில்லை, இது செய்யவில்லை என்பவர்கள் சற்றே சிந்திக்கவேண்டும். ஒரு நியாயமான வாய்ப்புக் கொடுக்கவேணும். (#He deserves a fair chance)
போலித் தேசியம் பேசியவர்களை, மதவாத அரசியல் செய்பவர்களை, சொந்தங்களை வாழ வைப்பவர்களை, அரசுடன் இயங்கிய முன்னைய ஆயுதக் குழுக்களை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்கவேண்டும்.
இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்ட காலத்தில் அவர்களோடு இணைந்து களமாடியவர்கள் தேசியம் பேசுகின்ற கயவர்கள்.
ஆகையினால் தமிழ்பேசும் பெருங்குடி மக்களே!!!
வடக்கு கிழக்கு மக்கள் தமிழரசுக் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி அதனை வெற்றி பெறச்செய்யவேண்டும். தமிழரசின் தலைமை வெளிப்படுத்தும் தொலைநோக்கும், தெளிவான திட்டங்களும், எண்ணிலடங்காத கடந்தகால சாதனைகளும் மனங்கொள்ளத் தக்கவை.
அமிர்தலிங்கத்துக்குப் பின்னால் தற்போது சுமந்திரன் காட்டும் தலைமைத்துவம் வியக்கவைக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கிடைக்கும்.
தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கும் யாழ் தேர்தல் மாவட்ட மக்கள் விருப்பு வாக்குகளை கட்டாயமாக இடவேண்டும். திருமிகு சிவஞானம் சிறீதரன் அவர்கள் இல்லாத வேறு மூவரை தெரிவு செய்வதே சாலச்சிறந்தது
1. சிறீதரன் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் இப்போது முத்தாய்ப்பாக வைக்கும் வாதம், தான் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு ஆணை வேண்டும் என்பதாகும்.
2. நீதிமன்றில் முதல் தவணையிலேயே நாம் செய்ததெல்லாம் பிழை. பொதுச்சபை உறுப்பினர்களை முதலில் இருந்து தெரிவு செய்து மீண்டும் பொதுச்சபையைக் கூட்டி தெரிவுகள் செய்வோம் என்ற பொருள்படும்படி உறுதிகொடுத்த புத்திசாலியான இவர் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதியுடையவரா தொக்கி நிற்கும் கேள்வி.
மூலக்கிளைகளின் தேர்தல் தொடங்கி பொதுச்சபைத் தேர்தல் வரை குறைந்தது ஒருவருடமாவது ஆகும் என்பது கூடத் தெரியாமல் எந்த சட்ட ஆலோசனையை ஏற்று இம்முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை.
3. நாடாளுமன்றிற்கு தெரிவான காலத்தில் இருந்து இற்றை வரை இவர் மன்றின் உள்ளும் புறமும் பேசிய பேச்சுகளை ஆராய்ந்தால் “தேசியம்” என்ற ஒற்றைச் சொலை, கலாசாரம் என்ற பொதுச் சொல்லாடலை, அவற்றைத் தவிர்த்து வேறு எதனைப் பேசியிருக்கிறார்? தமிழ் இளையோர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம், பொருளாதாரம், தமிழ் மண்ணின் எதிர்காலம், யாழ்ப்பாணத்தின் நீராதாரம் என எந்த விடயத்தில் தொலை நோக்கோடு நடந்திருக்கிறார்?
4. கிளிநொச்சி மக்கள் அவரின் ஜமீனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் அவருக்கு வாக்களிப்பர் என்பதில் சந்தேகமில்லை. அவர்களும் தமது எண்ணத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும். உசுப்பேத்தல் பேச்சுக்களால் தமிழ் இளைஞர்களை, தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் இந்த முன்னாள் ஆசிரியர் தலமை தாங்கும் தகுதியற்றவர்.
5. தான் தலைவராகத் தெரிவுசெய்யப்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் பங்காற்றி, கருத்துப் பகிர்ந்த பின்னால், கட்சி முடிவெடுத்த போதும். யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தவிர, பொதுவேட்பாளரை ஆதரிப்பது இல்லை என்ற நிலைப்பாடு தொடர்ச்சியாக மத்திய குழுவில் இருந்தமை தெரிந்தும் பொது வேட்பாளரை ஆதரித்த சிறீதரன் கட்சிக்கு வேட்பாளராக வந்தமையே அவரின் நல்வாய்ப்பு தான்.
6. பொது வேட்பாளருக்கு சங்கு சின்னத்தை தெரிவு செய்த “பெருமை”யோடு அவருக்காக பிரச்சாரம் செய்தபின்னால் தமிழரசுக்கட்சியின் தலைமை தாங்கும் தார்மீக உரிமை சிறீதரன் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
7. இரண்டு வருடங்களாவது கட்சியில் இருந்தவர்களுக்குத் தான் வேட்பாளர் நியமனம் வழங்கவேண்டும் என்று குமுறுவது தேர்தல் பிரசாரத்தில் செய்யவேண்டிய ஒன்றா என்பதை ஆராய்தாலே அவர் தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று நிரூபிக்கின்றது.
8. சிறீதரன் அவர்கள் தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக வந்தபோது தான் எத்தனை வருடம் கட்சியில் இருதார் என்பதைச் சொல்லித் தானே இந்த வாதத்தை முன்வைக்கவேண்டும்?
9. கடந்த 2020 தேர்தல் முடிந்தபின்னால் கொழும்புக் சென்றுவிட்ட சசிகலா ரவிராஜ் அம்மையார் இந்தத் தேர்தல் வரையில் எந்தவித கட்சிப் பணியிலும் இல்லைஎன்பதும், சாவகச்சேரிக் கிளையிலோ அதன் ஊடாகவோ எந்தவித மக்கள் சந்திப்புகளிலோ, மக்கள் பிரச்சனையிலோ இருக்கவில்லை என்று தெரிந்தபின்னும், அவர் மாவையரின் சம்பந்தி என்பதற்காக அவருக்காக வேட்பாளர் தெரிவில் வாதாடிய இவருக்கு தன் தலமைதாங்கும் தகுதி பற்றி தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒருவர் நாட்டை வழிநடத்த ஆணை கேட்கிறார்.
ஒருவர் கட்சிப் பொறுப்பெடுக்க ஆணை கேட்கிறார்.
ஒருவர் மக்கள் நல்வாழ்வுக்கான் வளமான எதிர்காலத்திற்காக ஆணை கேட்கிறார்.
யாழ் மண்ணில் வாழ இளைஞர்கள் நாட்டம் கொள்ளாது இருக்கும் சூழலை எவர் மாற்ற நினைக்கிறாரோ அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். எந்தக் காலத்திலும் எந்தத் தீர்வும் இல்லாது தேசிய விடுதலை என்ற கோசத்தோடு தம் வாழ்வை கட்டியெழுப்பி ஒப்பிலா தனியொரு தலைவராக வரவிரும்புவரை தட்டி வையுங்கள்! தள்ளி வையுங்கள்!!!