ரஷ்யா மீது உக்ரைன் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல்; முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது
தலைநகர் மொஸ்கோவை குறித்து மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை முறியத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையில் போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப்பெரிய உக்ரேனிய தாக்குதல்களில் ஒன்றாக விவரிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை உறுதிச் செய்த மொஸ்கோ நேகர முதல்வர் அனைத்து ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டதாக கூறினார்.
கருங்கடல் நகரமான சோச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஏறக்குறைய 50 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரஷ்யா விருந்தளித்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
“மொத்தத்தில், 25 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக” மொஸ்கோ நேகர முதல்வர் கூறினார்.
இந்த ட்ரோன்கள், மொஸ்கோவின் ராமன்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்கள் மற்றும் தென்மேற்கில் உள்ள டொமோடெடோவோ நகரத்தை நோக்கிச் சென்றதாக கூறப்படுகின்றது
இந்த தாக்குதலில் உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களில் சில இடங்களில் சேதங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து மொஸ்கோவின் டொமோடெடோவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.