வெளிநாடு சென்று மீண்டும் வந்து ரணில் தீவிர அரசியல் ஈடுபடுவார்
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பொதுத் தேர்தல் முடிந்தவுடன் வெளிநாட்டுக்குச் செல்லும் அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் சிலிண்டரின் கீழ் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் அவர் உரையாற்றி வருகின்றார்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் குறைந்தபட்சம் தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றம் வரமாட்டார் என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சார்பில் அறிக்கை வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முதல் சுற்றிலேயே பாராளுமன்றம் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்லத் தயாராகிவிட்டதாகவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.