பலதும் பத்தும்

4000 ஆண்டுகள் பழமையான ரகசிய அமைப்பு கண்டுபிடிப்பு; ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

4000 ஆண்டுகள் பழமையான, பிரமை போன்ற சுவர்களைக் கொண்ட வட்டமான கல் அமைப்பு ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கிரேக்க மலையுச்சியில் காணப்படும் மர்மமான 4000 ஆண்டுகள் பழமையான, வட்டவடிவ கல் அமைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மினோவான் நாகரிகத்தின் காலத்திலிருந்தே இந்த தனித்துவமான கட்டிடம் பிரமை போன்ற சுவர்களைக் கொண்டிருந்ததாக கிரேக்க அரசாங்கம் கூறியுள்ளது.

4000 ஆண்டுகள் பழமையான ரகசிய அமைப்பு கண்டுபிடிப்பு - ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன? | 4000 Year Old Stone Circle Uncovered Island Crete

கிரீட் தீவில் உள்ள கஸ்டெல்லி நகருக்கு அருகில் 500 மீட்டர் உயரமுள்ள மலையின் உச்சியில் தான் குறித்த இரகசியம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 1800 சதுர மீட்டர் அளவுள்ள வட்டவடிவ கல் கட்டிடம், எட்டு கல் வளையங்களைக் கொண்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த வளாகத்தின் நோக்கம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் 3700 மற்றும் 4000 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் இது தோன்றிருக்கலாம் என கூறுகின்றனர்.

அந்த இடத்தில் ஏராளமான விலங்குகளின் எலும்புகளும் கைபற்றப்பட்டுள்ளன.

குறித்த கண்டுப்பிடிப்பானது, கிரீஸ் நாட்டில் ஒரு தீவில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கிரேக்க கலாச்சார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த அமைப்பு 157 அடி விட்டம் கொண்டது என்றும், மினோவான் கல்லறைகளைப் போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.