வெளிநாட்டில் கல்லால் அடித்து மரணத்தை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானிய பெண்
தனது தாய் மாமாவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், பிரித்தானிய பெண் ஒருவர் கல்லால் அடித்து மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, அவரது குழந்தையும் தற்போது வதிவிட முறைகேடு வழக்கில் சிக்கியுள்ளது. 30 வயது கடந்த, நிறுவனம் ஒன்றில் முன்னாள் இயக்குநரான குறித்த பிரித்தானியர் கடந்த 2021 ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தபோது தனது தாயாரின் சகோதரரை மணக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருமணம் முடிந்து சுமார் ஒரு மாதத்திற்கு பின்னரே குறித்த பிரித்தானியர் தமது கணவரின் குடியிருப்புக்கு செல்ல ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவர் கர்ப்பிணியானார்.
ஆனால், தனது மாமாவுக்கு பிரித்தானிய வதிவிட உரிமம் பெற்றுத்தரவே குறித்த பிரித்தானிய பெண்மணி தொடர்புடைய திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், அதன் காரணமாகவே அவரின் பிள்ளைக்கு தாயானார் என்றும் பாகிஸ்தான் பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்த பிரித்தானியர், தாம் கடுமையான அழுத்தத்தின் காரணமாகவே பாகிஸ்தான் சென்றதாகவும், வதிவிட உரிமம் பெற்றுத்தரும் பொருட்டே திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வதிவிட உரிமம் பெற உதவினால், தமக்கு கார், குடியிருப்பு, பணம் என வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் வசதிகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் அந்த பிரித்தானியரான உறவினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த நபர் தம்மையும் குழந்தையையும் கண்டுகொள்வதில்லை என்றும், எனது வாழ்க்கையை அந்த நபர் தொலைத்துவிட்டார், உதவி தேவை என்றும் குறித்த பெண்மணி முறையிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது ஷரியா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும், தண்டனையாக கசையடி அல்லது கல்லால் அடித்து மரணம் என விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தாய்வழி மாமாவிற்கும் உண்மையான மருமகளுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு இடையேயான திருமணம் ஷரியா சட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
அத்தகைய உறவு முறையில் திருமண பந்தம் நிறுவுவது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் அது விபச்சாரத்தின் வகையின் கீழ் வருகிறது.
இதனிடையே, இந்த விவகாரம் அம்பலமானதை அடுத்து அந்த பாகிஸ்தானியர் தலைமறைவாகியுள்ளார். ஆனால் பொலிசார் முன்னெடுத்த தீவிர தேடுதல் நடவடிக்கையால் அவர் இந்த வாரம் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.