இலங்கை

2 மாத குழந்தையை பற்றைக்குள் வீசிய பொலிஸார்- யாழ். சுன்னாகத்தில் பதற்றம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கி 2 மாத குழந்தையை  பற்றைக்குள்  வீசியதால்  அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காவல்துறையினர் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை ஏற்பட்ட விபத்து  காரணமான பொலிஸாரின் தவறை மறைக்க பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் , 2 மாத குழந்தை மற்றும் பெண்கள் உட்பட குடும்பத்தினர் மீது பொலிஸார் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மேலும் கூறுகையில்,

“நாங்கள் எமது வாகனத்தில் பயணிக்கையில், எங்களை முந்திச்சென்ற மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குளாகியது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குடித்து விட்டு வாகனம் செலுத்தியதாகவும் அது எமது தவறில்லை எனவும் அருகில் இருந்தவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் எனது கணவரிடம் வாகன அனுமதிப்பத்திரத்தை கேட்டனர். போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வராததால் எனது கணவர் வாகன அனுமதி பத்திரத்தை கொடுக்கவில்லை.

அனைவரது தொலைபேசிகளை பறித்து பற்றைக்குள் வீசினார்கள்.எனது கணவனை இரும்பு கம்பிகளால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

தடுக்க முற்பட்ட என்னையும் தாக்கினர். கீழே விழுந்த எனது 2 மாத குழந்தையை எடுத்து பற்றைக்குள்  வீசினர். எனது சகோதரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.காயப்படட எங்களை வைத்தியசாலைக்கு செல்வதற்கு கூட அனுமதிக்காமல் வீதியை மறித்து கொடூரமான முறையில் தாக்கினார்கள்.

பின்னர் நாம் பயணித்த வாகனத்தை பறித்து சென்றுவிட்டார்கள்.

எனவே இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.