முதல்முறையாக தண்ணீர் குழாய் வழியாக Internet வசதி பெறும் பிரித்தானிய தீவுகள்
பிரித்தானியாவில் முதல்முறையாக சில தீவுகளுக்கு தண்ணீர் குழாய் வழியாக இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஆர்க்னே தீவுகளில் உள்ள பாபா வெஸ்ட்ரே தீவில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் தங்களின் இணைய இணைப்புகளை தண்ணீர் குழாய் வழியாக பெறுகின்றன.
இந்த புதிய முறையில், தீவில் உள்ள கம்யூனிட்டி கட்டுப்பாட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்களில் கேபிள்கள் அமைக்கப்பட்டு, அதனூடாக உயர்-வேக இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.
இப்போது, ஒன்லைன் தொலைதூர மருத்துவ ஆலோசனைகளில் பங்கேற்கவும், ஓன்லைன் கேமிங் போன்றவை செய்யவும் இந்த புதிய இணைய இணைப்பினால் சாத்தியமாகியுள்ளது.
இந்த புதிய அமைப்பின் மூலம், தீவில் உள்ள தண்ணீர் குழாய்களின் மூலம் ஒரே குழாயின் கீழ் நீரினுடன் இணைக்கப்பட்ட கேபிள்கள் இணைய இணைப்பை வழங்குகின்றன. இந்தப் புது முறையானது குழாய்களை தோண்டுதல் தேவையில்லாமல் கிலோமீட்டருக்கு மேல் வரை இணைய இணைப்பை தருவதால் விரைவாகவும் குறைந்த செலவில் அமைக்கப்படுகின்றது.