பலதும் பத்தும்
டொனால்ட் ட்ரம்ப்பின் வீட்டில் கண்காணிக்கும் ரோபோ நாய் (வீடியோ)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வீட்டை ரோபோ நாய் பாதுகாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உச்சபட்ச பாதுகாப்பு
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவி ஏற்கவுள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவாகும் நபருக்கு, ரகசிய பாதுகாப்பு மூலமாக உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும்.
அந்த வகையில் ட்ரம்ப்பின் மார்-எ-லாகோ வீட்டில் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருபுறம் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தாலும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபட ரோபோ நாய் ஒன்று வலம் வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
கண்காணிக்கும் ரோபோ நாய்
இந்த ரோபோ, வளாக சுவர் அருகே எதாவது பொருள் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறது.
தற்போது ட்ரம்ப்பின் ரோபோ நாய் குறித்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில்,
“தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போதுமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.