உலகிலேயே வட கொரியா போல அதிக மர்மம் நிறைந்த நாடு எது தெரியுமா?
உலகத்தில் அதிக மர்மம் நிறைந்த நாடு எது என்பது பற்றியும், என்னென்ன விடயங்கள் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகிலேயே மிகவும் மர்மமான நாடு என்ன என்று கேட்டால் அனைவருக்கும் வட கொரியா தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த பதிவில் நாம் பார்க்க போவது மற்றொரு நாடு.
அது எந்த நாடு என்றால் மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேற்பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தான் (turkmenistan) நாடு தான். இந்த நாட்டில் எளிதாக சொல்ல முடியாமல் பல மர்மங்கள் நிறைந்துள்ளன.
இந்த நாடானது 1925 முதல் 1991 -ம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்தது.
பின்னர், 1991 -ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதைவுற்றபோது தனிநாடாக மாறியது. அப்போது இருந்து துருக்மெனிஸ்தான் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நாட்டில் பெரும்பாலான இடங்கள் மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளன. அதேபோல இங்கு தங்க கட்டடங்களும் உள்ளன.
மேலும், இந்த நாட்டின் தலைநகரமான அஷ்கபாத்தில் 4.5 மில்லியன் சதுர மீட்டர் தூரத்தில் 543 வெள்ளை மார்பிள் கட்டடங்கள் கட்டப்பட்டன. இது, 2013 -ம் ஆண்டில் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
இந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமானால் தற்போது கூட கொரோனா பரிசோதனை அவசியம். அதுமட்டுமல்லாமல், இந்த நாட்டின் விசா பெறுவது மிகவும் அரிதானது.
முக்கியமாக, இங்கு 40 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் வேடிக்கையான முறையில் தாடியை வைக்கக்கூடாது. தான் நினைத்த கருத்துக்களை சொல்ல கூடாது. பேச்சு சுதந்திரமே இந்த நாட்டில் இல்லை.
மேலும், பயண சுதந்திரமும் கிடையாது. ஆனால், இந்நாட்டு மக்களுக்கு தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.