பலதும் பத்தும்
கூகுள் லென்ஸின் புதிய அப்டேட்: வொய்ஸ் ரெகோர்ட்டில் கேள்வி கேட்கலாம்
தொலைபேசியில் காணப்படும் கூகுள் லென்ஸில் ஒரு பொருளின் புகைப்படத்தை பயன்படுத்தி அது தொடர்பிலான கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், தற்போதைய புதிய அம்சத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வொய்ஸ் மூலம் உங்கள் கேள்விகளை பதிவு செய்து கொள்ள முடியும்.
அதாவது, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது கெமராவைக் காட்டி வொய்ஸ் மூலம் கூகுளின் ஏஐ மொடலிடம் அதுகுறித்து கேள்விகள் கேட்கலாம்.
சுமார் ஏழு ஆண்டுகளின் பின் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, வேறொரு மொழியில் இருக்கும் ஒரு கடிதத்தை மொழி பெயர்த்து தரும்படி கூகுள் லென்ஸிடம் கேட்கலாம்.
ஒவ்வொரு மாதமும் கூகுள் லென்ஸ் மூலமாக சுமார் 20 பில்லியன் தேடல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
எது எவ்வாறெனினும் டைப் செய்து நேரத்தை வீணாக்குவதை விட இது மிகவும் சுலபமான ஒரு அப்டேட் ஆகும்.